எல்லாரும் அவங்கவங்க பிறந்த நாளை குடும்பம் அல்லது நண்பர்களுடன் கொண்டாடுறது வழக்கம்.. கொண்டாடியும் இருக்கோம்.. (பின்ன நாங்க மட்டும் என்னவாம்னு எதிர் கேள்வி எல்லாம் கேக்கப் பிடாது) அதுவே ஒரு சந்தோசம்னா... சில நேரம் நமக்கு தெரியாம அவங்களே பிளான் பண்ணி, சர்ப்ரைஸ் பார்ட்டி-களும் வைப்பதுண்டு. (ஹ்ம்மம்ம்ம்ம்... அப்படி என் பிறந்த நாளைக்கு எனக்கு எந்த பயபுள்ளையும் வைக்கலங்க... )
இப்படி தான் என் கணவரோட பிறந்த நாளுக்கு, சரி எல்லாரும் தான் சர்ப்ரைஸ் பண்றாங்க... நம்மளும் பண்ணலாம்னு.. ஒரு நல்ல எண்ணத்துல... நெருங்கிய சில நண்பர்கள் கிட்ட.. பேசி... ஏற்பாடு பண்ண ஆரம்பிச்சேன்.. முதல் முயற்சியா.. (ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தேன் இருந்துச்சு......) வீட்டில் நான் விருந்து சமையல் மாதிரி பண்ணினா சந்தேகம் வந்திரும்னு சொல்லி... ஒரு பிரண்ட் கிட்ட... இவருக்கு போன் பண்ணி... அவங்க வீட்டுக்கு கூப்பிடச் சொல்லி (சந்தேகம் வராத படிக்கு தான்...) பேசிட்டு இருக்குறதா பிளான் பண்ணேன்.
சரின்னு இவரும் கிளம்பி போய்ட்டார்.. அவசரம் அவசரமா சமையல் பண்ணி முடிச்சு, மத்த பிரண்ட்ஸ் எல்லாம் வர வச்சு... (என் பிரண்ட்ஸ் வேற.. பாவம்.. வீட்டு முன்னாடி கார் பார்க் பண்ணினா.. இவுக கண்டு பிடிச்சிரப் போறாகன்னு... கார்-ஐ தள்ளி பார்க் பண்ணிட்டு... நடந்து வந்தாங்க...) அந்த அவசரத்துலயும் பலூன் எல்லாம் ஊதி... எல்லாம் ரெடி பண்ணி வச்சிட்டு... இவர் வீட்டுக்கு வர நேரம் ஆயிருச்சேன்னு... லைட் எல்லாம் ஆப் பண்ணிட்டு... எல்லாரும் ஒரு ரூம்-இல் ஒளிஞ்சு இருந்தாங்க...!
எல்லாரும் அவர் கதவை திறக்கப் போற அந்த, சத்தத்துக்காக கவனமா வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க... இவர் கதவை திறந்ததும்... சர்ப்ரைஸ்ன்னு சத்தம் போடுறதா பிளான்... மனுஷன் கார் பார்க் பண்ணிட்டு..... நடந்து வந்து.... டோர் நாப் திறக்கற வரைக்கும்... ஏதோ த்ரில்லர் படம் பார்க்கற எஃபக்ட்ல வெயிட் பண்ணிட்டு இருக்கோம்... இந்த மனுஷன் கதவ திறந்ததும்.... "சர்ப்ரைஸ்"ன்னு அவரே கத்தினார் பாருங்க... நாங்க எல்லாரும் ஒரு நிமிஷம் ஒன்னும் புரியாம... (என்னாது இது??? கிர்ர்ரர்ர்ர்ர் ) ஒரு செகண்ட் அமைதி ஆய்ட்டோம்.
அப்புறம் என்ன?? எல்லாரும் சுதாரிச்சு.... அவருக்கு விஷ் பண்ணிட்டு... கலகலப்பா பேசிட்டு, இருந்து போனாங்க.. (பின்ன வேற என்னத்த பண்றது...?) எனக்கு செம கடுப்பு... ஏங்க அப்படி பண்ணீங்க.. நாங்க எல்லாரும் எவ்ளோ ஆசையா வெயிட் பண்ணிட்டு இருந்தோம்ன்னு கேட்டா..... அதுக்கு அவரு எனக்கு முதல்லயே டவுட் வந்திருச்சும்மான்னு பெருமையா சொன்னார்..... ஹலோ.... டவுட்-ஏ வந்தாலும் அதுக்கு இப்படியா போட்டு உடைக்கறதுன்னு........ கேட்டு புலம்பிட்டு இருந்தேன்.. (ஒரு மனுஷி எவ்ளோ ப்ளான்ன்னன்.... பண்ணி.... பார்ட்டி வச்சேன்... இப்படி தான் ஆப்பு வைக்கணும்.. ரெம்ப நல்லவரு போங்க ..... இப்புடி எத்தன பேர் கிளம்பி இருக்காங்கன்னு தெரியலயே...இனிமே சர்ப்ரைஸ் பார்ட்டி வைப்ப வைப்பன்னு.....................சரி விடுங்க.. அத வேற விளக்கமா சொல்லிக்கிட்டு... )
அதென்ன நம்ம எது செய்யப்போனாலும்..... இப்புடி ஏடாகூடமாவே நடக்குது......! இத்தன கூத்துல நாங்க எல்லாரும் தீவிரமா.... டிஸ்கஸ் பண்ணி எப்படி கண்டுபிடிச்சிருப்பாருன்னு... அதுல உள்ள குறைகள் எல்லாம் பார்த்து... ச.... நம்ம இப்படி பண்ணி இருக்கணும்... அப்படி பண்ணி இருக்கணும்னு ஒரே டிஸ்கசன்....என் பிரண்டு ஒருத்தங்க... அடுத்த தரம் பக்காவா பண்ணிரலாம் பா... ன்னு சொன்னாங்க... (திரும்பவுமா???????? ஹ்ம்ம் ஹும்ம்ம்ம்)
எத்தன தரம் அடி வாங்குறது??? நா வரல இந்த விளையாட்டுக்கு...!!!
பகிர்வைப் படித்த அனைவருக்கும் நன்றிங்க.
...அன்புடன் ஆனந்தி
(படம்: நன்றி கூகிள்)







