ரொம்ப நாளாவே இந்த எலி மேட்டர் சொல்ல நினச்சு, மறந்து மறந்து போகுது.. இன்னிக்கு விடறதா இல்ல.. எப்படியும் சொல்லிற வேண்டியது தான்..!
ஓகே.. எங்க இருந்து ஆரம்பிக்கறது.. சரி, என் வண்டியில் இருந்து ஆரம்பிக்கலாம்.. எங்கும் வெளியூர் போனால், வழியில் எதாவது சாப்பிட ஸ்நாக்ஸ் வாங்கி வண்டியில் வைத்து சாப்பிடுவது வழக்கம்... அப்படி ஏதும், நொறுக்கு தீனி சாப்பிட்டு, அங்கங்கே எதுவும் சிதறி இருக்கும் போல இருக்கு..
அப்போ அப்போ, வண்டிய கிளீன் பண்றதும் உண்டு தான்.. அதிலும் சில பல, மிஸ் ஆகி இருக்கும் போல.. இத ஏன் திரும்ப திரும்ப சொல்றேன்னு இப்போ தெரியும் உங்களுக்கு..
சில மாதங்களுக்கு ஒரு தரம், வண்டிக்கு ஆயில் சேன்ஜ் பண்ணனும்... அப்படியே வண்டி மெயிண்டனன்ஸ் பண்ணனும்.. அதுக்காக வண்டிய எடுத்துட்டு போய் விட்டாச்சு.. அதுல பாருங்க.. சுமாரா ஆயில் சேன்ஜ்க்கு 20 முதல் 30 டாலர் வரை செலவு ஆகும்.... அப்புறம் மெயிண்டனன்ஸ்-க்கு ஒரு 100 முதல் 150 டாலர் வரை ஆகும்...
டீலர் போன் பண்ணி, 500 டாலர் ஆகும்னு சொன்னாங்க.. எங்களுக்கு பேரதிர்ச்சி... :O
என்னது 500 டாலர்-ஆ??? நம்ம என்ன பென்ஸ் காரை-யா மெயிண்டனன்ஸ்க்கு விட்டோம்-னு எங்களுக்கே டவுட் வந்திரிசின்னா பாருங்களேன்..!!
ஏன், எதுக்கு..?? வண்டியில ஏதும் பிரச்சனையா-னு கேட்டா.. வண்டியோட, முகப்பு பானர்-ஐ திறந்து காமிச்சாங்க... அங்க தான் மேட்டரே....!! உள்ளே இருந்த வயர் எல்லாம் கடிச்சு, லாலி பாப் குச்சி, சாக்லேட் பேப்பர், இன்னும் இதர பல சாமான் செட்டோட... எலி குடும்பம் நடத்திட்டு இருந்திருக்கு.
"ஏன்டா, நீ வீடு கட்டி விளையாட என் வண்டி தானா கிடைச்சதுன்னு..??" எலி கிட்ட கேக்கவா முடியும்.. அவ்வ்வ்வவ்வ்வ்வவ்...
வேற என்ன பண்றது, கேட்ட பணத்த குடுத்துட்டு வண்டி சரி செஞ்சு வாங்கிட்டு வந்தாச்சு.. அதுல இருந்து, யாரவது எதாவது சாப்பாடு பொருள் வண்டியில கீழ போட்டா செம டென்ஷன் ஆகுது.. ஹ்ம்ம்.. என் பிரச்சினை எனக்கு....!!
இந்த பிரச்சனைக்கு அப்புறம், வண்டி ஓட்டும் போதும், உள்ளூர பயம் தான்.. எலி உள்ள இருக்குமோன்னு..!! அதனால, எப்பவும் அலர்ட்டா தான் வண்டி ஓட்றேனாக்கும்...! :D :D
சரி அப்போ, நா கிளம்பட்டா...?? இன்னொரு, எலி மேட்டர் இருக்கு, பிறகு சொல்றேன்..! பதிவை படித்தவர்களுக்கு நன்றிகள் பல..!